• Apr 30 2024

கிளிநொச்சியில் களைகட்டும் புத்தாண்டு வியாபாரம்...!

Sharmi / Apr 11th 2024, 1:39 pm
image

Advertisement

தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் புத்தாண்டு நிகழ்வுகளுக்கு தேவையான பொருட்களை  கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் புத்தாடை கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்,  இவ்வருடம் புத்தாடை கொள்வனவில் அதிக ஆர்வம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இம்முறை சித்திரை புதுவருடத்தை ஒட்டிய நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக பணி நிமிர்த்தம் வெளிமாவட்டங்களில் தங்கியியுள்ளவர்கள் தமது  சொந்த ஊர்களுக்கு வருகை தந்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

அதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த 05 ஆம் திகதி முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




கிளிநொச்சியில் களைகட்டும் புத்தாண்டு வியாபாரம். தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் புத்தாண்டு நிகழ்வுகளுக்கு தேவையான பொருட்களை  கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் புத்தாடை கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்,  இவ்வருடம் புத்தாடை கொள்வனவில் அதிக ஆர்வம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.இம்முறை சித்திரை புதுவருடத்தை ஒட்டிய நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக பணி நிமிர்த்தம் வெளிமாவட்டங்களில் தங்கியியுள்ளவர்கள் தமது  சொந்த ஊர்களுக்கு வருகை தந்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.அதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த 05 ஆம் திகதி முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement