• May 18 2024

அடுத்த பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் 113 ஆசனங்களை பெறமுடியாது - ஷான் விஜேலால்! samugammedia

Tamil nila / Oct 28th 2023, 11:32 am
image

Advertisement

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் அறுதிபெரும்பான்மையைக்கூட (113) பெறமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது -என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் தெரிவித்தார்.

எனவே, தற்போதைவிடவும் குழப்பகமான தொங்கு அரசே அமையக்கூடும் எனவும் அவர் கூறினார்.

அடுத்த தேர்தல்களில் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், மக்கள் மற்றும் கட்சிக்கு நன்மை பயக்கும் வகையில் எமது முடிவு அமையும்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பல அணிகள் இருப்பதால் வாக்குகள் பிரிந்துசெல்லும். எந்தவொரு கட்சியாலும் 75 ஆசனங்களுக்குமேல் கைப்பற்ற முடியாத நிலையே ஏற்படும். ஆட்சி அமைப்பதற்காக கூட்டு சேர வேண்டும். ” – எனவும் அவர் கூறினார்.

அடுத்த பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் 113 ஆசனங்களை பெறமுடியாது - ஷான் விஜேலால் samugammedia அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் அறுதிபெரும்பான்மையைக்கூட (113) பெறமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது -என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் தெரிவித்தார்.எனவே, தற்போதைவிடவும் குழப்பகமான தொங்கு அரசே அமையக்கூடும் எனவும் அவர் கூறினார்.அடுத்த தேர்தல்களில் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், மக்கள் மற்றும் கட்சிக்கு நன்மை பயக்கும் வகையில் எமது முடிவு அமையும்.அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பல அணிகள் இருப்பதால் வாக்குகள் பிரிந்துசெல்லும். எந்தவொரு கட்சியாலும் 75 ஆசனங்களுக்குமேல் கைப்பற்ற முடியாத நிலையே ஏற்படும். ஆட்சி அமைப்பதற்காக கூட்டு சேர வேண்டும். ” – எனவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement