• Jan 11 2025

யாழில் வட மாகாண 6 ஆவது உடற்கட்டமைப்பு : ஆணழகன் மற்றும் பெண் உடலமைப்பு அழகி போட்டிகள்

Tharmini / Dec 29th 2024, 9:05 pm
image

யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன்(Body building) மற்றும் பெண் உடலமைப்பு அழகி( Women physique) ஆகிய போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று (28) இடம்பெற்றன.

வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம்பெற்ற போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை மன்னார் TSP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட லியோன் ஜோயல் பெற்றுக்கொண்டார்.

மூன்றாம் இடத்தை வவுனியா JRP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சுகுமார் ரன்சித்குமார் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, பெண்கள் உடலமைப்பு  அழகிகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி வட மாகாண பெண் உடலமைப்பு  அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை நியூ கெல்த் பிற்னஸ் சார்பாகப் போட்டியிட்ட மோனிஷா மகேந்திரராஜா பெற்றுக் கொண்டார்.

மூன்றாவது இடத்தை நோத் சென்ரர் உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜெயபாணி ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.





யாழில் வட மாகாண 6 ஆவது உடற்கட்டமைப்பு : ஆணழகன் மற்றும் பெண் உடலமைப்பு அழகி போட்டிகள் யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன்(Body building) மற்றும் பெண் உடலமைப்பு அழகி( Women physique) ஆகிய போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று (28) இடம்பெற்றன.வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம்பெற்ற போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக தெரிவு செய்யப்பட்டார்.இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை மன்னார் TSP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட லியோன் ஜோயல் பெற்றுக்கொண்டார்.மூன்றாம் இடத்தை வவுனியா JRP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சுகுமார் ரன்சித்குமார் பெற்றுக்கொண்டார்.இதேவேளை, பெண்கள் உடலமைப்பு  அழகிகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி வட மாகாண பெண் உடலமைப்பு  அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை நியூ கெல்த் பிற்னஸ் சார்பாகப் போட்டியிட்ட மோனிஷா மகேந்திரராஜா பெற்றுக் கொண்டார்.மூன்றாவது இடத்தை நோத் சென்ரர் உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜெயபாணி ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement