• May 18 2024

வடமாகாண விளையாட்டு போட்டிகள் அடிப்படை வசதி இன்றிய மைதானங்களில் முன்னெடுப்பு - மாணவர்கள் குற்றச்சாட்டு samugammedia

Chithra / Aug 7th 2023, 10:53 pm
image

Advertisement

 வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும் பருத்தித்துறை பகுதியில் அடிப்படை வசதி இன்றி தனியார் மைதானங்களில் இன்று திங்கட்கிழமை போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருவதாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டிகள்  இன்றையதினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள நான்கு மைதாதன்தில் இடம்பெற்ற நிலையில்  சில தனியார் மைதானங்கள் அடிப்படை வசதிகளின்றி காணப்படுவதாக  விளையாட்டிக்களில் கலந்து கொண்ட மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவரவதாவது,

வடமாகாண ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான மாகாண காற்பந்தாட்டம் உட்பட சில விளையாட்டு போட்டிகள் பருத்தித்துறைப் பகுதியிலுள்ள தனியார் விளையாட்டு மைதானங்களில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து பாடசாலை  இருந்து மாணவ மாணவிகள் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பகுதியில் குறித்த நிகழ்வுக்காக சென்ற நிலையில் தனியார் விளையாட்டு மைதானங்களில் மலசல கூடம் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளின்றி காணப்பட்டதாக குற்றச்சாட்டினர்.

ஒரு தனியார் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் கள்ளுத் தவறணை நிலையமும் காணப்பட்டதுடன் குடிநீர் அயல் வீட்டில் இருந்தே மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டமை கமராக்களில் பதிவாகியுள்ளது. 

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண தீவகப் பகுதிகளில் இருந்து வருகை தரும் மாணவர்கள் போட்டிக்காக பருத்தித்துறைக்கு செல்லும்போது பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.

வெயிலும் வெப்பமும் நிறைந்த சூழலாக தற்காலம் காணப்படுகின்ற நிலையில் வடமாகாண ரீதியில் இதனை ஒழுங்கமைக்கின்ற பொழுது போக்குவரத்து மற்றும் இதர வசதிகளை கருத்திற்கொள்ளாது அமைத்தமை குறித்து விசனம் வெளியிடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் வடக்குமாகாண விளையாட்டு துறை பணிப்பாளர் ராஜசீலனிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, வடமாகாண ரீதியான படசாலை மாணவர்களுக்கான போட்டியே இடம்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் குறித்த பிரச்சினை தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் நாம் நடவடிக்கை எடுத்திருப்போம்.

மாணவர்கள் நீண்ட நாள் தங்குதல் மற்றும் அவர்களுடைய செலவுகளை கருத்திற்கொண்டு குறித்த நான்கு மைதானங்களையும்  தயார்படுத்தியிருந்தோம்.

பிரச்சனையான மைதானத்தை மாற்றி புறிதொரு பாடசாலை மைதானத்திற்கு போட்டிகளை மாற்ற ஏற்பாடு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனை யாழ்பாணத்தில் வைத்திருந்தால் மாணவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இலகுவாக அமைந்திருக்கும் அல்லவா என வினவிய பொழுது? 

யாழ்ப்பாண நகரில் ஏற்பாடு செய்ய தங்குமிடவசதிகள் உட்பட்ட சில பிரச்சினைகள் காணப்பட்டமையினால் நகர்பகுதியில் குறித்த விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யமுடியவில்லை.

தற்பொழுது குறித்த விடயங்கள் சுட்டிகாட்டபட்ட நிலையில் தனியார் மைதானத்தில்  நடைபெற  போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.



வடமாகாண விளையாட்டு போட்டிகள் அடிப்படை வசதி இன்றிய மைதானங்களில் முன்னெடுப்பு - மாணவர்கள் குற்றச்சாட்டு samugammedia  வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும் பருத்தித்துறை பகுதியில் அடிப்படை வசதி இன்றி தனியார் மைதானங்களில் இன்று திங்கட்கிழமை போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருவதாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டிகள்  இன்றையதினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள நான்கு மைதாதன்தில் இடம்பெற்ற நிலையில்  சில தனியார் மைதானங்கள் அடிப்படை வசதிகளின்றி காணப்படுவதாக  விளையாட்டிக்களில் கலந்து கொண்ட மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவரவதாவது,வடமாகாண ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான மாகாண காற்பந்தாட்டம் உட்பட சில விளையாட்டு போட்டிகள் பருத்தித்துறைப் பகுதியிலுள்ள தனியார் விளையாட்டு மைதானங்களில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து பாடசாலை  இருந்து மாணவ மாணவிகள் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பகுதியில் குறித்த நிகழ்வுக்காக சென்ற நிலையில் தனியார் விளையாட்டு மைதானங்களில் மலசல கூடம் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளின்றி காணப்பட்டதாக குற்றச்சாட்டினர்.ஒரு தனியார் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் கள்ளுத் தவறணை நிலையமும் காணப்பட்டதுடன் குடிநீர் அயல் வீட்டில் இருந்தே மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டமை கமராக்களில் பதிவாகியுள்ளது. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண தீவகப் பகுதிகளில் இருந்து வருகை தரும் மாணவர்கள் போட்டிக்காக பருத்தித்துறைக்கு செல்லும்போது பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.வெயிலும் வெப்பமும் நிறைந்த சூழலாக தற்காலம் காணப்படுகின்ற நிலையில் வடமாகாண ரீதியில் இதனை ஒழுங்கமைக்கின்ற பொழுது போக்குவரத்து மற்றும் இதர வசதிகளை கருத்திற்கொள்ளாது அமைத்தமை குறித்து விசனம் வெளியிடப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் வடக்குமாகாண விளையாட்டு துறை பணிப்பாளர் ராஜசீலனிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, வடமாகாண ரீதியான படசாலை மாணவர்களுக்கான போட்டியே இடம்பெற்று வருகின்றது.அதன் அடிப்படையில் குறித்த பிரச்சினை தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் நாம் நடவடிக்கை எடுத்திருப்போம்.மாணவர்கள் நீண்ட நாள் தங்குதல் மற்றும் அவர்களுடைய செலவுகளை கருத்திற்கொண்டு குறித்த நான்கு மைதானங்களையும்  தயார்படுத்தியிருந்தோம்.பிரச்சனையான மைதானத்தை மாற்றி புறிதொரு பாடசாலை மைதானத்திற்கு போட்டிகளை மாற்ற ஏற்பாடு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.இதனை யாழ்பாணத்தில் வைத்திருந்தால் மாணவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இலகுவாக அமைந்திருக்கும் அல்லவா என வினவிய பொழுது யாழ்ப்பாண நகரில் ஏற்பாடு செய்ய தங்குமிடவசதிகள் உட்பட்ட சில பிரச்சினைகள் காணப்பட்டமையினால் நகர்பகுதியில் குறித்த விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யமுடியவில்லை.தற்பொழுது குறித்த விடயங்கள் சுட்டிகாட்டபட்ட நிலையில் தனியார் மைதானத்தில்  நடைபெற  போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement