• Oct 01 2024

இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கினால் வடபகுதி பெண்கள் பாதிக்கப்படுவார்கள் - கலந்துரையாடலில் சுட்டிக்காட்டு!SamugamMedia

Sharmi / Mar 15th 2023, 4:09 pm
image

Advertisement

வடபகுதி மீனவர்கள் முகம் கொடுக்கவும் பிரைச்சினைகள் தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள சிவில் அமைப்புகளிற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் மற்றும் தேசிய அமைப்பாளர் ஏமன் குமார்  தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் மீனவ தலைவர்கள் மற்றும் மீனவ பெண்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் நீர்கொழும்பினை அண்மித்து அத்துடன் தென்னிலங்கையினை தளமாக கொண்டு, தேசிய ரீதியாக செயற்படுகின்ற சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண் அமைப்புக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு, சட்ட விரோதமான மீன்பிடி முறை, பருவகால மீன்பிடி முறை, மீனவ பெண்கள் முகம்கொடுக்கும் பிரைச்சினைகள், மீனவ வளங்கள் மற்றும் துறைகள்  அபிவிருத்தி செய்யப்படாமை, இராணுவ காணி ஆக்கிரமிப்பும் ஆக்கிரமித்த காணிகளை மீள வழங்கப்படாமை  தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள  வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளை அவர்களிற்குரியதாக மட்டுமன்றி அதனை தேசிய மீனவ பிரைச்சினைகளாக நோக்கி தீர்வினை காண வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய மீனவர்களின் பிரைச்சினைகள் தொடர்பாக காலத்திற்கு காலம் எடுக்கப்படும் தீர்க்கமற்ற முடிவுகள் கேலிக் கூத்தானது எனவும் இந்திய இழுவை மடிக்கு அனுமதி பெற்று கொடுப்பதாக கடற்தொழில் அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் கூறியிருப்பதற்கு கண்டனமும் வெளியிட்டுள்ளனர்.  

அவ்வாறு அனுமதி வழங்கப்படும் போது கரையோரப் பகுதிக்கு வருகை தருகின்ற இந்திய மீனவர்கள் தொழில செய்வதுடன் எமது கலாச்சாரம், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளையும் வடபகுதி பெண்களும் சந்திக்க நேரிடும் எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.


இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கினால் வடபகுதி பெண்கள் பாதிக்கப்படுவார்கள் - கலந்துரையாடலில் சுட்டிக்காட்டுSamugamMedia வடபகுதி மீனவர்கள் முகம் கொடுக்கவும் பிரைச்சினைகள் தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள சிவில் அமைப்புகளிற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் மற்றும் தேசிய அமைப்பாளர் ஏமன் குமார்  தலைமையில் இடம்பெற்றுள்ளது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் மீனவ தலைவர்கள் மற்றும் மீனவ பெண்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பு மற்றும் நீர்கொழும்பினை அண்மித்து அத்துடன் தென்னிலங்கையினை தளமாக கொண்டு, தேசிய ரீதியாக செயற்படுகின்ற சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண் அமைப்புக்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு, சட்ட விரோதமான மீன்பிடி முறை, பருவகால மீன்பிடி முறை, மீனவ பெண்கள் முகம்கொடுக்கும் பிரைச்சினைகள், மீனவ வளங்கள் மற்றும் துறைகள்  அபிவிருத்தி செய்யப்படாமை, இராணுவ காணி ஆக்கிரமிப்பும் ஆக்கிரமித்த காணிகளை மீள வழங்கப்படாமை  தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள  வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளை அவர்களிற்குரியதாக மட்டுமன்றி அதனை தேசிய மீனவ பிரைச்சினைகளாக நோக்கி தீர்வினை காண வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், இந்திய மீனவர்களின் பிரைச்சினைகள் தொடர்பாக காலத்திற்கு காலம் எடுக்கப்படும் தீர்க்கமற்ற முடிவுகள் கேலிக் கூத்தானது எனவும் இந்திய இழுவை மடிக்கு அனுமதி பெற்று கொடுப்பதாக கடற்தொழில் அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் கூறியிருப்பதற்கு கண்டனமும் வெளியிட்டுள்ளனர்.  அவ்வாறு அனுமதி வழங்கப்படும் போது கரையோரப் பகுதிக்கு வருகை தருகின்ற இந்திய மீனவர்கள் தொழில செய்வதுடன் எமது கலாச்சாரம், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளையும் வடபகுதி பெண்களும் சந்திக்க நேரிடும் எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement