• Feb 13 2025

நாடு திரும்பிய பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கைது!

Chithra / Feb 13th 2025, 8:23 am
image

 

பதில் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான உயர்மட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரபல பாதாள உலக நபரான மண்டலகல பொம்புகலகே சுமித் பிரியந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியான பிரியந்த, பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தவர்.

குறிப்பாக குருவிட்ட பகுதியில் 5 மில்லியன் ரூபாவை மிரட்டி பெற்றமை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்மை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அவர் தேடப்பட்டு வந்தார்.

சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் போது, ​​அவர் நாட்டை விட்டு வெளியேறி, நீதித்துறை செயல்முறையைத் தவிர்த்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விரிவான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டின் மூலம், இலங்கைப் பொலிஸார் வெற்றிகரமாக அவரை நாடு கடத்தியுள்ளனர்.

நேற்று இரவு பிரியந்த விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்.

சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு திரும்பிய பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கைது  பதில் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான உயர்மட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரபல பாதாள உலக நபரான மண்டலகல பொம்புகலகே சுமித் பிரியந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியான பிரியந்த, பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தவர்.குறிப்பாக குருவிட்ட பகுதியில் 5 மில்லியன் ரூபாவை மிரட்டி பெற்றமை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்மை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அவர் தேடப்பட்டு வந்தார்.சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் போது, ​​அவர் நாட்டை விட்டு வெளியேறி, நீதித்துறை செயல்முறையைத் தவிர்த்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விரிவான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டின் மூலம், இலங்கைப் பொலிஸார் வெற்றிகரமாக அவரை நாடு கடத்தியுள்ளனர்.நேற்று இரவு பிரியந்த விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்.சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement