• Apr 30 2024

புத்தாண்டு விடுமுறையில் சிவனொளி பாதமலைக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tamil nila / Apr 17th 2024, 6:51 pm
image

Advertisement

சிங்கள - இந்து புத்தாண்டு விடுமுறையின் போதும் அதன் பின்னரும் நல்லதண்ணி -  பாதையில் சிவனடிபாத மலைக்கு அதிகளவான யாத்திரிகர்கள்  வருவதாக நல்லதண்ணியா பொலிஸ் நிலைய  பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார்.

 இலங்கை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 ஹட்டன் அரச பேருந்து டிப்போவினால் ஹட்டன் புகையிரத நிலையத்தில் இருந்து நல்லதண்ணி வரை ரயிலில் ஹட்டனுக்கு வரும் பக்தர்களுக்காக விசேட பேருந்து சேவையொன்று நடாத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் அரச பேருந்து நிலைய இயக்குனர் காரியாலய அதிகாரி தெரிவித்தார்.

 பேரூந்து மற்றும் வேன்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் நல்லதண்ணிக்கு வருகின்றனர்.  நல்லதண்ணியில் உள்ள அனைத்து வாகன தரிப்பிடங்களும் யாத்திரிகர்களை ஏற்றி வந்த பேருந்களால் நிரம்பியிருந்தமையினால் நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் இருபுறங்களிலும் பேருகள் மற்றும் வேன்கள் லக்ஷபான பிரதேசம் வரை சுமார் 03 கிலோமீற்றர் தூரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் சிவனடி பாத மலைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்காக ஹட்டன் கோட்ட  பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிபுன தெஹிகம அவர்களின் பணிப்புரைக்கு அமைய விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு விடுமுறையில் சிவனொளி பாதமலைக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சிங்கள - இந்து புத்தாண்டு விடுமுறையின் போதும் அதன் பின்னரும் நல்லதண்ணி -  பாதையில் சிவனடிபாத மலைக்கு அதிகளவான யாத்திரிகர்கள்  வருவதாக நல்லதண்ணியா பொலிஸ் நிலைய  பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார். இலங்கை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹட்டன் அரச பேருந்து டிப்போவினால் ஹட்டன் புகையிரத நிலையத்தில் இருந்து நல்லதண்ணி வரை ரயிலில் ஹட்டனுக்கு வரும் பக்தர்களுக்காக விசேட பேருந்து சேவையொன்று நடாத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் அரச பேருந்து நிலைய இயக்குனர் காரியாலய அதிகாரி தெரிவித்தார். பேரூந்து மற்றும் வேன்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் நல்லதண்ணிக்கு வருகின்றனர்.  நல்லதண்ணியில் உள்ள அனைத்து வாகன தரிப்பிடங்களும் யாத்திரிகர்களை ஏற்றி வந்த பேருந்களால் நிரம்பியிருந்தமையினால் நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் இருபுறங்களிலும் பேருகள் மற்றும் வேன்கள் லக்ஷபான பிரதேசம் வரை சுமார் 03 கிலோமீற்றர் தூரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.மேலும் சிவனடி பாத மலைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்காக ஹட்டன் கோட்ட  பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிபுன தெஹிகம அவர்களின் பணிப்புரைக்கு அமைய விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement