• May 08 2024

திடீரென இழுத்து மூடப்பட்ட நுவரெலியா தபால் நிலையம்...!வெடித்தது போராட்டம்...!samugammedia

Sharmi / Nov 30th 2023, 2:55 pm
image

Advertisement

பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று(30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதிய உணவு இடைவேளையின்போதே தபால் நிலையத்தைமூடி, அதற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா, கண்டி, காலி மற்றும் தியதலாவை ஆகிய நகரங்களில் உள்ள புராதன பெறுமதிக்க தபால் நிலையங்களை, குறுகிய கால இலாபத்துக்காக விற்பனை செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும்,   தபால் திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறைய நிவர்த்தி செய்யப்பட வேண்டும், வரவு - செலவுத் திட்டம் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே போராட்டம் இடம்பெற்றது.

" 2016 முதல் தபால் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை. இதனால் திணைக்களத்தில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, புதிய நியமனம் வழங்கப்பட வேண்டும்." - என்று நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

" தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கமைய 10 ஆயிரம் ரூபா போதாது, எனவேதான் 20 ஆயிரம ரூபா கோரப்படுகின்றது." - எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


திடீரென இழுத்து மூடப்பட்ட நுவரெலியா தபால் நிலையம்.வெடித்தது போராட்டம்.samugammedia பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று(30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதிய உணவு இடைவேளையின்போதே தபால் நிலையத்தைமூடி, அதற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.நுவரெலியா, கண்டி, காலி மற்றும் தியதலாவை ஆகிய நகரங்களில் உள்ள புராதன பெறுமதிக்க தபால் நிலையங்களை, குறுகிய கால இலாபத்துக்காக விற்பனை செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும்,   தபால் திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறைய நிவர்த்தி செய்யப்பட வேண்டும், வரவு - செலவுத் திட்டம் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே போராட்டம் இடம்பெற்றது." 2016 முதல் தபால் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை. இதனால் திணைக்களத்தில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, புதிய நியமனம் வழங்கப்பட வேண்டும்." - என்று நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்." தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கமைய 10 ஆயிரம் ரூபா போதாது, எனவேதான் 20 ஆயிரம ரூபா கோரப்படுகின்றது." - எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Advertisement

Advertisement

Advertisement