• Jul 05 2025

விற்பனை நிலையங்களை அகற்ற சென்ற அதிகாரிகள் - காலி முகத்திடலில் பதற்றம்

Chithra / Jul 5th 2025, 9:12 am
image


கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று மதியம் அதிகாரிகள் சென்றபோது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

துறைமுக அபிவிருத்தி ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், காலி முகத்திடலில் வர்த்தகர்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் உருவாகியது.

இருப்பினும், நீண்ட காலமாக அப்பகுதியில் வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


வர்த்தகர்கள் நீண்ட காலமாக இந்த இடத்தில் வணிகம் செய்து வருவதாகவும், ஆனால் பொது சுகாதாரப் பரிசோதகர்களிடமிருந்து உரிய சான்றிதழ்களைப் பெற வேண்டியிருப்பதாகவும் கூறி, அவர்களை அகற்றுவதற்கு தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வணிகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.


விற்பனை நிலையங்களை அகற்ற சென்ற அதிகாரிகள் - காலி முகத்திடலில் பதற்றம் கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று மதியம் அதிகாரிகள் சென்றபோது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.துறைமுக அபிவிருத்தி ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், காலி முகத்திடலில் வர்த்தகர்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் உருவாகியது.இருப்பினும், நீண்ட காலமாக அப்பகுதியில் வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.வர்த்தகர்கள் நீண்ட காலமாக இந்த இடத்தில் வணிகம் செய்து வருவதாகவும், ஆனால் பொது சுகாதாரப் பரிசோதகர்களிடமிருந்து உரிய சான்றிதழ்களைப் பெற வேண்டியிருப்பதாகவும் கூறி, அவர்களை அகற்றுவதற்கு தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.எனினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வணிகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement