• May 13 2024

மட்டக்களப்பில் ஆறு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம்! வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல் SamugamMedia

Chithra / Mar 4th 2023, 3:07 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பேருக்கு ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாக இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் இலங்கையில் ஏற்படும் மரணங்களில் முதல் இடத்தினை புற்றுநோய் கொண்டிருக்கும் நிலையேற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் புற்றுநோய்க்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில், இவ்வாறான விழிப்புணர்வுகள் மூலம் தொற்றுநோயின் தாக்கம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வு பெறவேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த பேரணியானது மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் வரையில் சென்றதுடன் இதன்போது புற்றுநோய் தொடர்பான பல்வேறு பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் புற்றுநோயை கட்டுப்படுத்த, தவிர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகள் கொண்ட துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.


மட்டக்களப்பில் ஆறு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம் வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல் SamugamMedia மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பேருக்கு ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாக இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.எதிர்வரும் காலத்தில் இலங்கையில் ஏற்படும் மரணங்களில் முதல் இடத்தினை புற்றுநோய் கொண்டிருக்கும் நிலையேற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் புற்றுநோய்க்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில், இவ்வாறான விழிப்புணர்வுகள் மூலம் தொற்றுநோயின் தாக்கம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வு பெறவேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த பேரணியானது மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் வரையில் சென்றதுடன் இதன்போது புற்றுநோய் தொடர்பான பல்வேறு பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் புற்றுநோயை கட்டுப்படுத்த, தவிர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகள் கொண்ட துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement