• May 18 2024

இலங்கையில் தொடரும் அசம்பாவிதம் - இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..! samugammedia

Chithra / May 20th 2023, 7:57 am
image

Advertisement

பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், குறித்த நபர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 53 வயது மதிக்கத்தக்கவர் எனவும், களனி பகுதியில் வசிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவராத நிலையில், தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை தேடும் பணியை முடக்கிவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கையில் தொடரும் அசம்பாவிதம் - இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி. samugammedia பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், குறித்த நபர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.உயிரிழந்தவர் 53 வயது மதிக்கத்தக்கவர் எனவும், களனி பகுதியில் வசிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவராத நிலையில், தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை தேடும் பணியை முடக்கிவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement