• Feb 05 2025

நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள்; முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆலோசனை

Chithra / Feb 5th 2025, 1:28 pm
image

 

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் நன்மை பயக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், தீங்கான கொள்கைகளை எதிர்ப்பதற்கும் ஒன்றிணைந்த எதிரணியின் அவசியத்தை இந்த சந்திப்பின் போது  சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டு நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதே இக் கலந்துரையடலின் முதன்மை நோக்கமாமாக அமைந்தது.

நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒப்புக்கொண்டார்.

இதில்  கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், பி.சத்தியலிங்கம், ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள்; முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆலோசனை  எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் நன்மை பயக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், தீங்கான கொள்கைகளை எதிர்ப்பதற்கும் ஒன்றிணைந்த எதிரணியின் அவசியத்தை இந்த சந்திப்பின் போது  சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டு நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதே இக் கலந்துரையடலின் முதன்மை நோக்கமாமாக அமைந்தது.நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒப்புக்கொண்டார்.இதில்  கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், பி.சத்தியலிங்கம், ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement