• May 17 2024

யாழ்.உற்பத்தியாளர்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள்! பொலிஸார் எச்சரிக்கை samugammedia

Chithra / Aug 8th 2023, 11:48 am
image

Advertisement

 வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம்  காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் உற்பத்தியாளர்களை நாடி வரும் வெளிமாவட்ட வியாபரிகள்  அவர்களிடம் இருந்து உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து விட்டு , பணத்திற்கு பதிலாக காசோலைகளை வழங்கிவிட்டுச் செல்வதாகவும், குறித்த  காசோலையை உற்பத்தியாளர்கள் வங்கியில் வைப்பிலிடும் போது, கணக்கில் பணம் இல்லை என வருவதாகவும், அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்து  பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்கின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் யாழில்  கடந்த 07 மாதங்களில் 10 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான காசோலை மோசடி தொடர்பில் 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அதில் 06 மோசடி சம்பவங்கள் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 10 இலட்ச ரூபாய்க்கு குறைவான மோசடிகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ்.உற்பத்தியாளர்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் பொலிஸார் எச்சரிக்கை samugammedia  வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம்  காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.யாழ் உற்பத்தியாளர்களை நாடி வரும் வெளிமாவட்ட வியாபரிகள்  அவர்களிடம் இருந்து உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து விட்டு , பணத்திற்கு பதிலாக காசோலைகளை வழங்கிவிட்டுச் செல்வதாகவும், குறித்த  காசோலையை உற்பத்தியாளர்கள் வங்கியில் வைப்பிலிடும் போது, கணக்கில் பணம் இல்லை என வருவதாகவும், அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்து  பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்கின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்தவகையில் யாழில்  கடந்த 07 மாதங்களில் 10 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான காசோலை மோசடி தொடர்பில் 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அதில் 06 மோசடி சம்பவங்கள் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளார்.அதேவேளை 10 இலட்ச ரூபாய்க்கு குறைவான மோசடிகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement