• Nov 26 2024

ரஷ்யாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் விபத்து - 70 பேர் காயம்...!

Anaath / Jun 27th 2024, 12:00 pm
image

ரஷ்யாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டதனால் 70 பேர் காயமடைந்ததுள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, கோமி குடியரசின் வோர்குடாவில் இருந்து நோவோரோசிஸ்க் வரை 5,000 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில், இண்டா நகரம் அருகே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6.12 மணியளவில் தடம் புரண்டுள்ளது.

மொத்தம் 14 பெட்டிகளில் 511 பயணிகள் பயணித்த நிலையில், 9 பெட்டி தடம் புரண்டுள்ளது. இதில், 70 பயணிகள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனமழை காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், 2 மீட்பு ரயில்களுடன் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விபத்தில்  7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் விபத்து - 70 பேர் காயம். ரஷ்யாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டதனால் 70 பேர் காயமடைந்ததுள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, கோமி குடியரசின் வோர்குடாவில் இருந்து நோவோரோசிஸ்க் வரை 5,000 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில், இண்டா நகரம் அருகே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6.12 மணியளவில் தடம் புரண்டுள்ளது.மொத்தம் 14 பெட்டிகளில் 511 பயணிகள் பயணித்த நிலையில், 9 பெட்டி தடம் புரண்டுள்ளது. இதில், 70 பயணிகள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.கனமழை காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், 2 மீட்பு ரயில்களுடன் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.அத்துடன் குறித்த விபத்தில்  7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement