• Mar 28 2024

போதைக்கெதிராக செம்மண்ணோடையில் திரண்டெழுந்த மக்கள் : கண்டனப்பிரகடனம் நிறைவேற்றம்!

Tamil nila / Jan 27th 2023, 10:36 pm
image

Advertisement

போதையிருந்து எமது சமூகத்தையும் பிரதேசத்தையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் கண்டனப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (27.01.2023) செம்மணணோடையில் இடம்பெற்றது.



செம்மண்ணோடை பள்ளிவாயல்கள் சமூக நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.அப்துல் றகுமான் தலைமையில் இடம்பெற்ற இக்கண்டனப்பேரணியில் செம்மண்ணோடை பிரதேசத்தைச்சேர்ந்த குபா, தக்வா, பாரி ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் அஸ்ஸைப், ஸபா பள்ளிவாயல்களிலிருந்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஊர்வலமாக வந்த மக்கள் செம்மண்ணோடை சாட்டோ மைதானத்தை வந்தடைந்ததும் கண்டனப் பிரகடனம் இடம்பெற்றதன் பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.



கண்டனப்பிரகடணத்தில் போதைப்பாவனையில் ஈடுபடுவோருக்கும் அவற்றினை விற்பனை செய்யும் நபர்களின் குடும்பத்தின் எந்தவிதமான நன்மை தீமைகளிலும் ஊர் பொதுமக்கள் கலந்து கொள்வதில்லை என்றும் அவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அவர்களை அடையாளப்படுத்த வேண்டுமென்றும் பிரகடனம் சம்மேளனத்தலைவரினால் வாசிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க, வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர் பண்டார, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர், சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.றாசிக் மற்றும் பள்ளிவாயல்களின் பிரதம இமாம்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

போதைக்கெதிராக செம்மண்ணோடையில் திரண்டெழுந்த மக்கள் : கண்டனப்பிரகடனம் நிறைவேற்றம் போதையிருந்து எமது சமூகத்தையும் பிரதேசத்தையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் கண்டனப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (27.01.2023) செம்மணணோடையில் இடம்பெற்றது.செம்மண்ணோடை பள்ளிவாயல்கள் சமூக நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.அப்துல் றகுமான் தலைமையில் இடம்பெற்ற இக்கண்டனப்பேரணியில் செம்மண்ணோடை பிரதேசத்தைச்சேர்ந்த குபா, தக்வா, பாரி ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் அஸ்ஸைப், ஸபா பள்ளிவாயல்களிலிருந்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஊர்வலமாக வந்த மக்கள் செம்மண்ணோடை சாட்டோ மைதானத்தை வந்தடைந்ததும் கண்டனப் பிரகடனம் இடம்பெற்றதன் பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.கண்டனப்பிரகடணத்தில் போதைப்பாவனையில் ஈடுபடுவோருக்கும் அவற்றினை விற்பனை செய்யும் நபர்களின் குடும்பத்தின் எந்தவிதமான நன்மை தீமைகளிலும் ஊர் பொதுமக்கள் கலந்து கொள்வதில்லை என்றும் அவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அவர்களை அடையாளப்படுத்த வேண்டுமென்றும் பிரகடனம் சம்மேளனத்தலைவரினால் வாசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க, வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர் பண்டார, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர், சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.றாசிக் மற்றும் பள்ளிவாயல்களின் பிரதம இமாம்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement