• Oct 05 2024

வங்குரோத்தில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ரணிலை கண்டுகொள்ளாத மக்கள்..! வஜிர ஆதங்கம்

Chithra / Oct 4th 2024, 7:44 am
image

Advertisement

 

வங்குரோத்து அடைந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் மீட்டெடுத்த ரணில் விக்மசிங்கவை மக்கள் பொருட்படுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கவலை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 

கடந்த இரண்டு வருடங்களில் ரணில் விக்ரமசிங்க இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்து கடன்களை பெற்று நாட்டை சீரமைத்துள்ளார்.

எதிரணிகளின் பொய்யான பரப்புரைகளினால் ரணில் இம்முறை தோற்கடிக்கப்பட்டார்.

மக்களின் தெய்வம் என்று அழைக்கப்பட்ட சி.பி. டி சில்வா தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 

இலவசக் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அநாகாரிக தர்மபாலவைக்கூட வெளியேற்றிய இவர்கள் இரண்டாண்டுகளில் நாட்டைக் கட்டியெழுப்பிய ரணில் விக்ரமசிங்கவை புறக்கணித்தார்கள் என்றார்.

வங்குரோத்தில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ரணிலை கண்டுகொள்ளாத மக்கள். வஜிர ஆதங்கம்  வங்குரோத்து அடைந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் மீட்டெடுத்த ரணில் விக்மசிங்கவை மக்கள் பொருட்படுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கவலை வெளியிட்டுள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த இரண்டு வருடங்களில் ரணில் விக்ரமசிங்க இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்து கடன்களை பெற்று நாட்டை சீரமைத்துள்ளார்.எதிரணிகளின் பொய்யான பரப்புரைகளினால் ரணில் இம்முறை தோற்கடிக்கப்பட்டார்.மக்களின் தெய்வம் என்று அழைக்கப்பட்ட சி.பி. டி சில்வா தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இலவசக் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.அநாகாரிக தர்மபாலவைக்கூட வெளியேற்றிய இவர்கள் இரண்டாண்டுகளில் நாட்டைக் கட்டியெழுப்பிய ரணில் விக்ரமசிங்கவை புறக்கணித்தார்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement