வாழ்வாதார செலவீனங்களை எதிர்கொள்ள முடியாது திண்டாடும் மக்கள்! திஸ்ஸ அத்தநாயக்க

65

தற்போதைய நிலையில் நாட்டுமக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். ஒரு சாரார் மட்டுமல்ல. வாழ்வாதார செலவீனங்களை எதிர்கொள்ள முடியாது ஒட்டுமொத்த மக்களும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை அங்குலான சுமானாராம விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு ஊடகங்களக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வருமானம் வரும் வழிகள் இல்லாமல் போயுள்ளன. அதேபோன்று நாளுக்குள் நாள் பொருட்களின் விலையும் அதிகரித்து செல்கின்றன. அபோபோன்று வாழ்வாதார செலவீனமும் அதிகரித்து செல்கின்றது.

எனினும், அரசாங்கத்துக்கு இது தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை. 2019, 2020 ஆம் ஆண்டுகளில் இந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதேபோன்று 2021 இலும் நாம் அதேபோன்று பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம்.

2022 ஆம் ஆரம்பமாகியுள்ள நிலையில், இவ்வாண்டிலாவது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் இது எதனையும் செய்யவில்லை.

இந்நிலையில், நாட்டில் இன்று சகல துறைகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன.

ரயில் துறையின் ஒருபுறம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்றும் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.

நாட்டில் சகல துறைகளும் செயலிழந்துள்ளன. தற்போதைய நிலையில் நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.

எனவே, நாட்டு மக்களுக்கு எவ்வித சலுகைகளையும் அரசாங்கம் வழங்கப் போவதில்லை. அதற்கான சலுகைகளும் அரசாங்கத்திடம் இல்லை.- என்றார்.

சீன வங்கியிடமிருந்து அரை பில்லியன் டொலர் கடன் கோரி இலங்கை விண்ணப்பம்