• May 18 2024

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்...! சம்பிக்க எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Oct 31st 2023, 4:53 pm
image

Advertisement

தற்போதைய அரசாங்கம் எடுத்த தீர்மானங்களால் வெகுவிரைவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் தலைதூக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான மாபெரும் மக்கள் அலை, தீப்பந்த போராட்டத்துடன் ஆரம்பமானது என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் நேற்று(30)  இடம்பெற்ற ஐக்கிய மக்கள் குடியரசின் மாவட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூக கட்டமைப்பில் நிலனிய அடிப் படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டுவிட்டோமென ஜனாதிபதி உட்பட அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

எரிபொருள்,எரிவாயு உட்பட மின்சார விநியோகத்தில் நிலவிய தட்டுப்பாடு குறைவடைந்துள்ளதுடன் எரிபொருள் எரிவாயு உட்பட மின்சார நுகர்வுக்கான மக்களின் கேள்வி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எரிபொருள், எரிவாயுவின் விலை மற்றும் மின் கட்டணம் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளதால் தேசிய தொழிற்றுறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர முயற்சியாண்மையை விரிவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் சமூகக் கட்டமைப்பில் மாறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் போராட்டம் மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான மாபெரும் மக்கள் அலை தீப்பந்தப் போராட்டத்துடன் ஆரம்பமானது என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.

போராட்டம் மீண்டும் தலை தூக்கும். அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.



அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் மீண்டும் வெடிக்கும். சம்பிக்க எச்சரிக்கை.samugammedia தற்போதைய அரசாங்கம் எடுத்த தீர்மானங்களால் வெகுவிரைவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் தலைதூக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான மாபெரும் மக்கள் அலை, தீப்பந்த போராட்டத்துடன் ஆரம்பமானது என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.குருநாகல் பகுதியில் நேற்று(30)  இடம்பெற்ற ஐக்கிய மக்கள் குடியரசின் மாவட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,சமூக கட்டமைப்பில் நிலனிய அடிப் படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டுவிட்டோமென ஜனாதிபதி உட்பட அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.எரிபொருள்,எரிவாயு உட்பட மின்சார விநியோகத்தில் நிலவிய தட்டுப்பாடு குறைவடைந்துள்ளதுடன் எரிபொருள் எரிவாயு உட்பட மின்சார நுகர்வுக்கான மக்களின் கேள்வி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.எரிபொருள், எரிவாயுவின் விலை மற்றும் மின் கட்டணம் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளதால் தேசிய தொழிற்றுறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சிறு மற்றும் நடுத்தர முயற்சியாண்மையை விரிவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் சமூகக் கட்டமைப்பில் மாறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் போராட்டம் மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது.கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான மாபெரும் மக்கள் அலை தீப்பந்தப் போராட்டத்துடன் ஆரம்பமானது என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். போராட்டம் மீண்டும் தலை தூக்கும். அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement