நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நிலுவையில் இருந்த வழக்கு தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டவர் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என நீதவானின் கையொப்பமிட்டு வழக்கு அறிக்கையொன்றை தயாரித்து மோசடி செய்த நபர் ஒருவர் இன்று (14) நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் பணியாற்றிய முன்னாள் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொய்யான வழக்கு அறிக்கையை தயாரிப்பதற்காக சந்தேக நபர் 35 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் வெலிசர நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய போது, இவ்வாறான முறையற்ற மோசடியில் ஈடுபட்டு வேலையிழந்து சிறையில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விதித்திருந்த விமானத் தடையை நீக்கும் வகையில் இந்த பொய்யான வழக்கு அறிக்கையை வழங்கி சந்தேக நபர் 35 இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்றுக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
நீதிவானின் கையொப்பத்தை இட்டு பொய்யான வழக்கு அறிக்கை வழங்கி நபர் கைது நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நிலுவையில் இருந்த வழக்கு தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டவர் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என நீதவானின் கையொப்பமிட்டு வழக்கு அறிக்கையொன்றை தயாரித்து மோசடி செய்த நபர் ஒருவர் இன்று (14) நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் பணியாற்றிய முன்னாள் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த பொய்யான வழக்கு அறிக்கையை தயாரிப்பதற்காக சந்தேக நபர் 35 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டவர் வெலிசர நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய போது, இவ்வாறான முறையற்ற மோசடியில் ஈடுபட்டு வேலையிழந்து சிறையில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விதித்திருந்த விமானத் தடையை நீக்கும் வகையில் இந்த பொய்யான வழக்கு அறிக்கையை வழங்கி சந்தேக நபர் 35 இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்றுக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.