• May 19 2024

மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மீனினம்! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Jul 15th 2023, 11:10 am
image

Advertisement

கிழக்கு கடற்கரையில் இருந்த ‘லோடியா’ என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது.

இந்த உயிரினம் மனித உடலில் உரசினால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதானி வைத்திய நிபுணர் கலாநிதி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இந்த மீன் இனத்தை கடலில் காணமுடியும் எனவும் இந்த மீன் ஒரு சிறிய பலூனைப் போலவும், வயிற்றில் நீளமான நுாலை போன்ற சுரப்பிகளைக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.

இந்த மீனை தொடுவதன் மூலம், ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து அதிர்ச்சி நிலைக்குச் செல்லலாம், இதன் மூலம் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மீனினம் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia கிழக்கு கடற்கரையில் இருந்த ‘லோடியா’ என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது.இந்த உயிரினம் மனித உடலில் உரசினால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதானி வைத்திய நிபுணர் கலாநிதி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இந்த மீன் இனத்தை கடலில் காணமுடியும் எனவும் இந்த மீன் ஒரு சிறிய பலூனைப் போலவும், வயிற்றில் நீளமான நுாலை போன்ற சுரப்பிகளைக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.இந்த மீனை தொடுவதன் மூலம், ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து அதிர்ச்சி நிலைக்குச் செல்லலாம், இதன் மூலம் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement