• May 12 2024

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலைநாட்ட திட்டம் - மந்தகதியில் பொலிசாரின் செயற்பாடுகள்..! சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு samugammedia

Chithra / Oct 26th 2023, 12:32 pm
image

Advertisement

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்த கதியில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது மேற்படி தெரிவித்தார். 

அண்மைய நாட்களில் பொலிசாரின் செயற்பாட்டினை பார்க்கும்போது எதற்கு எடுத்தாலும் ராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது யாழில் தொடர்ச்சியாக ராணுவத்தினை  நிலைநாட்டு வதற்காக கூட இந்த செயற்பாடுகள் அமைந்திருக்கலாம்.

கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டால் உடனே கைது செய்கின்றார்கள். போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள். 

ஆனால் யாழ். நகரில்  பட்டப்பகலில்  கேக் வெட்டிய 150 ற்கும் மேற்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் இன்று வரை 8 பேரை மட்டுமே பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலை நாட்டுவதற்காகவே பொலிசார் இவ்வாறு செயல்படுகிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாது விட்டால் போலீஸ் அதிகாரத்தினை மாகாணத்திடம் தாருங்கள் எனவும் கோரினார்.


யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலைநாட்ட திட்டம் - மந்தகதியில் பொலிசாரின் செயற்பாடுகள். சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு samugammedia  யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்த கதியில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது மேற்படி தெரிவித்தார். அண்மைய நாட்களில் பொலிசாரின் செயற்பாட்டினை பார்க்கும்போது எதற்கு எடுத்தாலும் ராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது யாழில் தொடர்ச்சியாக ராணுவத்தினை  நிலைநாட்டு வதற்காக கூட இந்த செயற்பாடுகள் அமைந்திருக்கலாம்.கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டால் உடனே கைது செய்கின்றார்கள். போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள். ஆனால் யாழ். நகரில்  பட்டப்பகலில்  கேக் வெட்டிய 150 ற்கும் மேற்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் இன்று வரை 8 பேரை மட்டுமே பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலை நாட்டுவதற்காகவே பொலிசார் இவ்வாறு செயல்படுகிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாது விட்டால் போலீஸ் அதிகாரத்தினை மாகாணத்திடம் தாருங்கள் எனவும் கோரினார்.

Advertisement

Advertisement

Advertisement