• Jan 22 2025

புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த திட்டம் - விரைவில் நடவடிக்கை! - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

Chithra / Jan 21st 2025, 1:09 pm
image

 

புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு 2013 ஆம் ஆண்டு 29 மில்லியன் டொலர் திட்டத்தைத் தொடங்கியது, ஆனால் அந்த திட்டம் தாமதமாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய இயந்திரங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி, கண்டி மற்றும் அபேக்ஷா வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டதாகவும், 

அவற்றை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இது தொடர்பான சிகிச்சை தொழில்நுட்பம் விரைவாக மேம்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அநுராதபுரம், குருநாகல் மற்றும் பதுளை ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து இயந்திரங்களும் 8 மாத காலத்திற்குள் மாற்றப்பட்டு, இந்த சிகிச்சை முறை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 


புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த திட்டம் - விரைவில் நடவடிக்கை - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு  புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு 2013 ஆம் ஆண்டு 29 மில்லியன் டொலர் திட்டத்தைத் தொடங்கியது, ஆனால் அந்த திட்டம் தாமதமாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்று (21) பாராளுமன்றத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய இயந்திரங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி, கண்டி மற்றும் அபேக்ஷா வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இது தொடர்பான சிகிச்சை தொழில்நுட்பம் விரைவாக மேம்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய அரசாங்கம் இதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அநுராதபுரம், குருநாகல் மற்றும் பதுளை ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து இயந்திரங்களும் 8 மாத காலத்திற்குள் மாற்றப்பட்டு, இந்த சிகிச்சை முறை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement