• May 12 2024

கஜேந்திரகுமார் எம்.பியின் இல்லத்தை சுற்றிவளைக்க திட்டம்! - பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா..? சபையில் வெளியான தகவல் samugammedia

Chithra / Aug 24th 2023, 2:39 pm
image

Advertisement

  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின், கொழும்பு இல்லைத்தை நாளை (25) சுற்றிவளைக்க சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இன்று சபையில் தெரிவித்தாா்.

இதுதொடர்பில் அவர் சபையில் உரையாற்றுகையில்,

காலையில் கஜேந்திரகமார் பொன்னம்பலத்தை சந்தித்தேன். அதன்போது நாளை இடம்பெறவுள்ள செயற்குழுவில் தன்னால் பங்குபற்ற முடியாது என்றும், கொழும்பிலுள்ள தனது இல்லத்தை ஒருசிலர் சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டாா். 

அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்குப்பற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டாா்.

இது பாரதூரமான பிரச்சினையாகும். கஜேந்திர குமார் பாராளுமன்ற உறுப்பினர். எனவே, அவ்வாறானவொரு திட்டமிருந்தால் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கவேண்டும். 

ஒவ்வொருவரும் நினைத்தப்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டை சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது. 

ஆகவே, அவருக்கும் அவரது இல்லதுக்குமான பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறேன்.” என்று குறிப்பிட்டாா். 


கஜேந்திரகுமார் எம்.பியின் இல்லத்தை சுற்றிவளைக்க திட்டம் - பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா. சபையில் வெளியான தகவல் samugammedia   பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின், கொழும்பு இல்லைத்தை நாளை (25) சுற்றிவளைக்க சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இன்று சபையில் தெரிவித்தாா்.இதுதொடர்பில் அவர் சபையில் உரையாற்றுகையில்,காலையில் கஜேந்திரகமார் பொன்னம்பலத்தை சந்தித்தேன். அதன்போது நாளை இடம்பெறவுள்ள செயற்குழுவில் தன்னால் பங்குபற்ற முடியாது என்றும், கொழும்பிலுள்ள தனது இல்லத்தை ஒருசிலர் சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டாா். அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்குப்பற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டாா்.இது பாரதூரமான பிரச்சினையாகும். கஜேந்திர குமார் பாராளுமன்ற உறுப்பினர். எனவே, அவ்வாறானவொரு திட்டமிருந்தால் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கவேண்டும். ஒவ்வொருவரும் நினைத்தப்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டை சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது. ஆகவே, அவருக்கும் அவரது இல்லதுக்குமான பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறேன்.” என்று குறிப்பிட்டாா். 

Advertisement

Advertisement

Advertisement