• Nov 12 2024

பெருந்தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வாபஸ்!

Chithra / Aug 6th 2024, 3:26 pm
image

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் 21 தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்த வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது அகரபதன பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து, இந்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

பெருந்தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வாபஸ்  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் 21 தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுஇந்த வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அப்போது அகரபதன பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து, இந்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement