• Sep 17 2024

சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தாக்குதல்! கொழும்பில் பரபரப்பு

Chithra / Feb 4th 2023, 6:17 am
image

Advertisement

மருதானை - எல்பிஸ்டன் மண்டபத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட அமைதி சத்தியாக்கிரக போராட்டத்தில் மதுபோதையில் இருந்த சிலர் கலந்துக்கொண்டு குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அமைதியான முறையில் தமது போராட்டத்தினை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மருதானை - எல்பிஸ்டன் மண்டபத்தின் முன்பாக அமைதி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட காலிமுகத்திடல் போராட்டக்காரர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தினை எதிர்த்து கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் (03) பிற்பகல் முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், தொடர்ந்து 24 மணி நேரமும் சத்தியாகிரகத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தாக்குதல் கொழும்பில் பரபரப்பு மருதானை - எல்பிஸ்டன் மண்டபத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட அமைதி சத்தியாக்கிரக போராட்டத்தில் மதுபோதையில் இருந்த சிலர் கலந்துக்கொண்டு குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாகவே போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும், அமைதியான முறையில் தமது போராட்டத்தினை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மருதானை - எல்பிஸ்டன் மண்டபத்தின் முன்பாக அமைதி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட காலிமுகத்திடல் போராட்டக்காரர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தினை எதிர்த்து கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் (03) பிற்பகல் முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், தொடர்ந்து 24 மணி நேரமும் சத்தியாகிரகத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதன் காரணமாக குறித்த பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement