கொழும்பு - கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் தகராறின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொழும்பு 13, ஜம்பட்டா தெருவைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட குற்றவாளியான பழனி ஷிரான் குளோரியன் குழுவால் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் கடத்தல்காரர் "புகுடுகண்ணா"வின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது.
இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணி; பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல். கொழும்பு - கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் தகராறின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.அதேவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொழும்பு 13, ஜம்பட்டா தெருவைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.இந்த துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட குற்றவாளியான பழனி ஷிரான் குளோரியன் குழுவால் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சுட்டுக் கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் கடத்தல்காரர் "புகுடுகண்ணா"வின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது.இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.