• Mar 10 2025

வீதியில் கைவிடப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தை பொலிஸாரால் மீட்பு

Chithra / Mar 10th 2025, 2:36 pm
image

 

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று இருப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு, உடனடியாக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், குழந்தை நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


வீதியில் கைவிடப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தை பொலிஸாரால் மீட்பு  அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று இருப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு, உடனடியாக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.மேலும், குழந்தை நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement