• Mar 10 2025

தலவாக்கலைக்குள் தனியாக களிமறங்கும் இராதாகிருஷ்ணன் எம்.பி.

Chithra / Mar 10th 2025, 2:57 pm
image

 

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பதுளை மாவட்டத்திலும் உள்ளுராட்சி சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட உள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஜக்கிய மக்கள் சக்தியோடு கூட்டணியாக நாம் களமிறங்குவோம்.

தலவாக்கலை என்பது மலையக மக்கள் முன்னணியின் கோட்டை. அங்கு நாம் தனித்து களமிறங்கி தலவாக்கலை, லிந்துலை சபைகளைக் கைப்பற்ற வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய இடங்களில் கூட்டணியாக சொல்வோம். எனவும் அவர் குறிப்பிட்டார்.

தலவாக்கலைக்குள் தனியாக களிமறங்கும் இராதாகிருஷ்ணன் எம்.பி.  உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஷ்ணன் தெரிவித்தார்.ஹட்டனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.பதுளை மாவட்டத்திலும் உள்ளுராட்சி சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட உள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஜக்கிய மக்கள் சக்தியோடு கூட்டணியாக நாம் களமிறங்குவோம்.தலவாக்கலை என்பது மலையக மக்கள் முன்னணியின் கோட்டை. அங்கு நாம் தனித்து களமிறங்கி தலவாக்கலை, லிந்துலை சபைகளைக் கைப்பற்ற வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய இடங்களில் கூட்டணியாக சொல்வோம். எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement