• Nov 26 2024

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் - சந்தேகநபர் கைது!

Chithra / Feb 12th 2024, 10:27 am
image

 

மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளனர். 

அந்நேரத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதோடு, சந்தேக நபர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

அதற்கமைய , லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மறைப்பதற்கு உதவிய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் - சந்தேகநபர் கைது  மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமை காலை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளனர். அந்நேரத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதோடு, சந்தேக நபர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளார்.அதற்கமைய , லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரை மறைப்பதற்கு உதவிய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement