• May 18 2024

கஜேந்திரகுமாரின் தந்தையை சுட்டது பொலிசார்.!சபையில் முழங்கிய சாணக்கியன்...!samugammedia

Sharmi / Jun 7th 2023, 1:01 pm
image

Advertisement

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தைகொழும்பில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்போது சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியை சபையில் சுட்டிக்காட்டிய இரா.சாணக்கியன், இவ்வாறான ஒரு நிலையில் சிவில் உடையில் சிலர் தன்னை கண்காணிப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு சந்தேகம் இருப்பது சாதாரணமாக விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்  சிவில் உடையில் வந்து தம்மை பொலிஸார் என்று அடையாளப்படுத்தும் நபர்கள் இரவு நேரங்களில் பெண்கள் இருக்கும் வீடுகளுக்கு திடீரென நுழையும் மோசமான நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு சம்பவம் எனக்கும் நடத்துள்ளது. நானும் அவர்களோடு முரண்பட்டுள்ளேன் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இவ்வாறு என்றால் சாதாரண மக்கள் என்னவெல்லாம் முகம் கொடுப்பார்கள்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையை கொழும்பில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அப்போது சண்டே லீடர் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

எனவே இவ்வாறான ஒரு நிலையில் சிவில் உடையில் சிலர் தன்னை கண்காணிப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு சந்தேகம் இருப்பது சாதாரணமான விடயம்.

இதற்கு முன்னர், பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளுக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கிய நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளிக்க சபாநாயகர் அனுமதி அளித்திருக்க வேண்டும் என சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கஜேந்திரகுமாரின் தந்தையை சுட்டது பொலிசார்.சபையில் முழங்கிய சாணக்கியன்.samugammedia தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தைகொழும்பில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்போது சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியை சபையில் சுட்டிக்காட்டிய இரா.சாணக்கியன், இவ்வாறான ஒரு நிலையில் சிவில் உடையில் சிலர் தன்னை கண்காணிப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு சந்தேகம் இருப்பது சாதாரணமாக விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்  சிவில் உடையில் வந்து தம்மை பொலிஸார் என்று அடையாளப்படுத்தும் நபர்கள் இரவு நேரங்களில் பெண்கள் இருக்கும் வீடுகளுக்கு திடீரென நுழையும் மோசமான நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.இவ்வாறானதொரு சம்பவம் எனக்கும் நடத்துள்ளது. நானும் அவர்களோடு முரண்பட்டுள்ளேன் என்றும் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இவ்வாறு என்றால் சாதாரண மக்கள் என்னவெல்லாம் முகம் கொடுப்பார்கள்.அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையை கொழும்பில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அப்போது சண்டே லீடர் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.எனவே இவ்வாறான ஒரு நிலையில் சிவில் உடையில் சிலர் தன்னை கண்காணிப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு சந்தேகம் இருப்பது சாதாரணமான விடயம்.இதற்கு முன்னர், பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளுக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கிய நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளிக்க சபாநாயகர் அனுமதி அளித்திருக்க வேண்டும் என சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement