• Jan 19 2025

ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த பொலிஸாரின் சிறப்பு வாகன சோதனை!

Chithra / Jan 3rd 2025, 1:25 pm
image

 

அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, 2025 ஜனவரி 02 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறப்பு வாகன சோதனை நடவடிக்கையை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக, அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் மறு அறிவித்தல் வரை இந்த விசேட வாகன சோதனை நடவடிக்கை தொடரும்.

வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய சட்ட விரோதமான செயற்பாடுகள், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் மற்றும் பிற உபகரணங்களுக்காக வாகனங்களை ஆய்வு செய்வது இந்த சிறப்பு நடவடிக்கையில் அடங்கும்.

பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தகுந்த இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மூன்று மணி நேரம் சோதனை நடத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த பொலிஸாரின் சிறப்பு வாகன சோதனை  அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, 2025 ஜனவரி 02 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறப்பு வாகன சோதனை நடவடிக்கையை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக, அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் மறு அறிவித்தல் வரை இந்த விசேட வாகன சோதனை நடவடிக்கை தொடரும்.வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய சட்ட விரோதமான செயற்பாடுகள், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் மற்றும் பிற உபகரணங்களுக்காக வாகனங்களை ஆய்வு செய்வது இந்த சிறப்பு நடவடிக்கையில் அடங்கும்.பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தகுந்த இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மூன்று மணி நேரம் சோதனை நடத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement