முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்தில் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அருகில் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரும்பும் சந்தியில் இராணுவத்தினர் பொலிசார் குவிக்கப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர், அங்கு காணொளி பதிவு செய்ததன் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரும்பும் சந்தியில் நின்ற பொலிசார் இராணுவ புலனாய்வாளர்களின் தூண்டுதலின் பெயரில் அவரை மறித்து நிறுத்தியுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர் எதற்காக மறைக்கிறீர்கள் என்று கேட்டபோது, எந்தவித பதிலையும் சொல்ல முடியாது நின்ற பொலிசார், சிறிது நேரத்தில் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை கோரியுள்ளனர்.
மேலும், வீடியோ எடுத்தீர்களா எனக் கோரி தங்களுடைய பதிவேடு ஒன்றில் ஊடகவியலாளரின் விபரங்களை பதிவு செய்துள்ளனர்.
எனினும், குறித்த பகுதியில் இருந்த இராணுவ புலனாய்வாளர்களுக்கு தகவல்களை வழங்கவே பொலிசார் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்படலாம் என்ற நிலையில், பொலிஸார் அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் ஒரு அங்கமாகவே குறித்த பகுதிக்கு சென்றுவந்த ஊடகவியலாளரை மறிந்த பொலிசார் ஊடகவியலாளரிடம் ஆவணங்களை கோரி ஆவணங்களை தங்களுடைய புத்தகங்களில் பதிவு செய்துள்ளனர்.
இதன் ஊடாக, குறித்த தகவல்களை புலனாய்வாளர்களுக்கும் இராணுவத்தினருக்கும் வழங்குவதற்காக பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இராணுவம், புலனாய்வாளர்கள் மக்களின் விபரங்களை பெற்றால் அது பிரச்சினையாக வரும் என்பதால் அவர்களின் எடுபிடிகளாக பொலிசார் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.