• May 17 2024

வட மாகாணத்தில் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த பொலிஸாருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு! samugammedia

Tamil nila / Jun 22nd 2023, 5:17 pm
image

Advertisement

இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த பொலிஸாருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று  வியாழக்கிழமை (22.06) வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அனுசரணையுடன், இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் ஏற்பாட்டில் இரண்டாம் நிலை கல்வியான தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. 


பயிற்சியின் இறுதியில் தமிழ் மொழியினை கற்ற பொலிஸாருக்கான பரீட்சை நடைபெற்று பரீட்சையில் சித்தியடைந்த பொலிஸாருக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, உதவி மாவட்ட செயலாளர் மகிந்தன் சபர்ஜா மற்றும் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் நிகழ்வினை சிறப்பித்ததுடன் தமிழ் மொழியில் சித்தியடைந்த பொலிஸாருக்கு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.


இந் நிகழ்வில் 260 பொலிஸாருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட மாகாணத்தில் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த பொலிஸாருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு samugammedia இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த பொலிஸாருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று  வியாழக்கிழமை (22.06) வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அனுசரணையுடன், இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் ஏற்பாட்டில் இரண்டாம் நிலை கல்வியான தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. பயிற்சியின் இறுதியில் தமிழ் மொழியினை கற்ற பொலிஸாருக்கான பரீட்சை நடைபெற்று பரீட்சையில் சித்தியடைந்த பொலிஸாருக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, உதவி மாவட்ட செயலாளர் மகிந்தன் சபர்ஜா மற்றும் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் நிகழ்வினை சிறப்பித்ததுடன் தமிழ் மொழியில் சித்தியடைந்த பொலிஸாருக்கு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.இந் நிகழ்வில் 260 பொலிஸாருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement