• Nov 18 2024

பொதுத் தேர்தலின் பின் அரசியலில் இருந்து விலகும் அரசியல்வாதிகள்!

Chithra / Nov 17th 2024, 8:44 am
image


தாம் தீவிர அரசியலில் இருந்து விலகுவதோடு ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாகவும் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது நம்பமுடியாத சவாலான பயணமாகும். குறிப்பாக மீண்டும் மீண்டும் தேர்தல் தோல்விகளை வழிநடத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

வெலிகம அமைப்பாளர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட ஆலோசனைக்கு பின்னர், தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட ரெஹான், இது ஒரு நம்பமுடியாத சவாலான பயணம் என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் தோல்விகள், மற்றும் மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று, தாம் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட ரெஹான் ஜயவிக்ரம நாடாளுமன்ற வாய்ப்பை பெறத் தவறிவிட்டார்.

முன்னதாக, மக்களின் ஆணையை மதித்து தாம் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பொதுத் தேர்தலின் பின் அரசியலில் இருந்து விலகும் அரசியல்வாதிகள் தாம் தீவிர அரசியலில் இருந்து விலகுவதோடு ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாகவும் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.தமது எக்ஸ் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது நம்பமுடியாத சவாலான பயணமாகும். குறிப்பாக மீண்டும் மீண்டும் தேர்தல் தோல்விகளை வழிநடத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.வெலிகம அமைப்பாளர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நீண்ட ஆலோசனைக்கு பின்னர், தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட ரெஹான், இது ஒரு நம்பமுடியாத சவாலான பயணம் என்றும் கூறியுள்ளார்.தேர்தல் தோல்விகள், மற்றும் மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று, தாம் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட ரெஹான் ஜயவிக்ரம நாடாளுமன்ற வாய்ப்பை பெறத் தவறிவிட்டார்.முன்னதாக, மக்களின் ஆணையை மதித்து தாம் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement