• Mar 18 2025

தேர்தலை பிற்போடுங்கள் - சிறீதரன் கோரிக்கை

Tharmini / Feb 17th 2025, 5:14 pm
image

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பின்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது தம்மை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலை பிற்போடுங்கள் - சிறீதரன் கோரிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பின்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது தம்மை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement