• Dec 01 2024

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு ஒத்திவைப்பு? வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Jan 17th 2024, 11:56 am
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும் புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்ட திகதியில் இடம்பெறுமா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும் புதிய தலைவர் தெரிவும் எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக  பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன்  ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் நோய்வாய்ப்பட்டுள்ளதால், கூட்ட ஆவணங்களில் அவர் கையெழுத்திட முடியாத சூழல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கூட்டத்துக்கான அழைப்பு கடிதங்களே இன்னும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவில்லை.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் 20ஆம் திகதி திருகோணமலையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த பின்னணியில், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கம் நுரையீரல் தொற்றுக்குள்ளாகி, உடல்நலம் குன்றியுள்ளார்.

அவர் கூட்ட ஆவணங்களில் கையெழுத்திடும் நிலையிலும் இல்லை. அவரை முழுமையான ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், பொதுக்குழு கூட்டத்துக்குக்கான அழைப்புக்கள் இதுவரை அனுப்பப்படவில்லை. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுபவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு அந்த பெயர் விபரத்தின் அடிப்படையிலேயே கூட்ட மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

இம்முறை தலைவர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் விதிகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.

எனினும், இதுவரை கடிதங்களில் பதில் பொதுச்செயலாளர் கையொப்பமிடவில்லை.

இன்று 17ஆம் திகதி, 21ஆம் திகதி பொதுக்குழு கூட்டம் இனிமேல் கடிதம் அனுப்பப்பட்டு கூட்டம் நடத்த வாய்ப்பில்லாத படியால், 2 வாரங்கள் அளவில் தலைவர் தெரிவு ஒத்தி வைக்கப்படும் என தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை தெரிவு திட்டமிட்ட திகதியில் 21ஆம் திகதி நடைபெறும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு ஒத்திவைப்பு வெளியான அறிவிப்பு.samugammedia இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும் புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்ட திகதியில் இடம்பெறுமா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும் புதிய தலைவர் தெரிவும் எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக  பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன்  ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில்,  தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் நோய்வாய்ப்பட்டுள்ளதால், கூட்ட ஆவணங்களில் அவர் கையெழுத்திட முடியாத சூழல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் கூட்டத்துக்கான அழைப்பு கடிதங்களே இன்னும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவில்லை.இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் 20ஆம் திகதி திருகோணமலையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.இந்த பின்னணியில், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கம் நுரையீரல் தொற்றுக்குள்ளாகி, உடல்நலம் குன்றியுள்ளார். அவர் கூட்ட ஆவணங்களில் கையெழுத்திடும் நிலையிலும் இல்லை. அவரை முழுமையான ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், பொதுக்குழு கூட்டத்துக்குக்கான அழைப்புக்கள் இதுவரை அனுப்பப்படவில்லை. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுபவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு அந்த பெயர் விபரத்தின் அடிப்படையிலேயே கூட்ட மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். இம்முறை தலைவர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் விதிகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.எனினும், இதுவரை கடிதங்களில் பதில் பொதுச்செயலாளர் கையொப்பமிடவில்லை. இன்று 17ஆம் திகதி, 21ஆம் திகதி பொதுக்குழு கூட்டம் இனிமேல் கடிதம் அனுப்பப்பட்டு கூட்டம் நடத்த வாய்ப்பில்லாத படியால், 2 வாரங்கள் அளவில் தலைவர் தெரிவு ஒத்தி வைக்கப்படும் என தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை தெரிவு திட்டமிட்ட திகதியில் 21ஆம் திகதி நடைபெறும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement