வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயப் பெருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், திருவிழாவுக்காக சுமார் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களில் இந்தியாவிலிருந்து மூவாயிரத்து ஐநூறு பேரும், இலங்கையிலிருந்து நான்காயிரம் பேரும் கலந்துகொள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
உணவு வழங்கல் விடயம் ஆரம்பத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தப் பணி கடற்படையிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
கச்சதீவுப் பகுதி நெடுந்தீவு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் என்ற அடிப்படையில் நெடுந்தீவு பிரதேசசபை தனது பணிகளை அங்கு முன்னெடுக்கும்.
நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கம் விற்பனை நிலையம் ஒன்றை அமைக்கும். உணவு விற்பனையில் ஈடுபட விரும்புவோர் நெடுந்தீவு பிரதேசசபைக்கு முன்னதாக அறிவித்து அனுமதி பெற்று கச்சத்தீவில் பணியில் உள்ள சுகாதார பிரிவின் அனுமதி பெற்று விற்பனையில் ஈடுபடமுடியும்.
அதேவேளை, ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி, வேலணை, ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி, மலேரியா தடுப்புப் பிரிவினர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையின் குழுவினர் சுகாதாரப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை,கச்சத்தீவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பிலும் மாவட்ட செயலாளர் விளக்கமளித்தார்.
அந்தவகையில், நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் ஆகிய துறைமுகங்களிலிருந்து தனியார் படகுகள் மூலம் சேவையில் ஈடுபடலாம்.
மேலும் இம்முறை ஊர்காவற்றுறையும் பயணத்தை மேற்கொள்ளும் இறங்குதுறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இறங்குதுறைகளில் கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தபடுவர்.
தனியார்படகுகளில் வருபவர்கள் அவர்களது தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி அந்தந்த கடற்படை முகாம்களில் பதிவினை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். இது குறித்து பங்குகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையைப் போல இருவழிக் கட்டணத்தையும் ஒருபடகிற்கு செலுத்தாது , செல்லும் பொழுதும் வருகை தருகின்ற பொழுதும் தனித்தனியே கட்டணங்களை அறவிடலாம்.
23ஆம் திகதி காலை 5 மணியிலிருந்து 10 மணிவரை படகுச்சேவை இடம்பெறும்.
கச்சதீவுக்கான முதலாவது படகு காலை 6 மணிமுதல் சேவையில் ஈடுபடும்.
வடதாரகை படகு அத்தியாவசிய சேவைகளுக்காக இலவச சேவையில் ஈடுபடும்.
இதேவேளை - இவ்வருடம் படகுகளின் தரத்தினை பரிசோதனை செய்யும் நிறுவனம் 34 படகுகளைச் சோதனையிட்டு 29 படகுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை வழமையைப்போல அன்றி கச்சதீவு திருவிழாவில் பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் செலவீனம் மற்றும் இதர பொருளாதார செலவீனங்களை மட்டுப்படுத்தும் முகமாக பெரும்பாலும் கடற்படை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் பூர்த்தி. 7500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றுகூடுவர்.யாழ் மாவட்ட செயலாளர் தெரிவிப்பு. வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயப் பெருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், திருவிழாவுக்காக சுமார் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களில் இந்தியாவிலிருந்து மூவாயிரத்து ஐநூறு பேரும், இலங்கையிலிருந்து நான்காயிரம் பேரும் கலந்துகொள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.உணவு வழங்கல் விடயம் ஆரம்பத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தப் பணி கடற்படையிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.கச்சதீவுப் பகுதி நெடுந்தீவு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் என்ற அடிப்படையில் நெடுந்தீவு பிரதேசசபை தனது பணிகளை அங்கு முன்னெடுக்கும்.நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கம் விற்பனை நிலையம் ஒன்றை அமைக்கும். உணவு விற்பனையில் ஈடுபட விரும்புவோர் நெடுந்தீவு பிரதேசசபைக்கு முன்னதாக அறிவித்து அனுமதி பெற்று கச்சத்தீவில் பணியில் உள்ள சுகாதார பிரிவின் அனுமதி பெற்று விற்பனையில் ஈடுபடமுடியும். அதேவேளை, ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி, வேலணை, ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி, மலேரியா தடுப்புப் பிரிவினர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையின் குழுவினர் சுகாதாரப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.இதேவேளை,கச்சத்தீவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பிலும் மாவட்ட செயலாளர் விளக்கமளித்தார்.அந்தவகையில், நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் ஆகிய துறைமுகங்களிலிருந்து தனியார் படகுகள் மூலம் சேவையில் ஈடுபடலாம். மேலும் இம்முறை ஊர்காவற்றுறையும் பயணத்தை மேற்கொள்ளும் இறங்குதுறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த இறங்குதுறைகளில் கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தபடுவர்.தனியார்படகுகளில் வருபவர்கள் அவர்களது தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி அந்தந்த கடற்படை முகாம்களில் பதிவினை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். இது குறித்து பங்குகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முறையைப் போல இருவழிக் கட்டணத்தையும் ஒருபடகிற்கு செலுத்தாது , செல்லும் பொழுதும் வருகை தருகின்ற பொழுதும் தனித்தனியே கட்டணங்களை அறவிடலாம்.23ஆம் திகதி காலை 5 மணியிலிருந்து 10 மணிவரை படகுச்சேவை இடம்பெறும்.கச்சதீவுக்கான முதலாவது படகு காலை 6 மணிமுதல் சேவையில் ஈடுபடும்.வடதாரகை படகு அத்தியாவசிய சேவைகளுக்காக இலவச சேவையில் ஈடுபடும்.இதேவேளை - இவ்வருடம் படகுகளின் தரத்தினை பரிசோதனை செய்யும் நிறுவனம் 34 படகுகளைச் சோதனையிட்டு 29 படகுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இம்முறை வழமையைப்போல அன்றி கச்சதீவு திருவிழாவில் பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் செலவீனம் மற்றும் இதர பொருளாதார செலவீனங்களை மட்டுப்படுத்தும் முகமாக பெரும்பாலும் கடற்படை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.