• Nov 14 2024

எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியவற்றை ஜனாதிபதி அனுர நிறைவேற்ற வேண்டும் - பழனி திகாம்பரம்

Chithra / Nov 3rd 2024, 11:56 am
image

 

அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீது மிகவும் அன்போடும் அக்கறையோடும் கருத்துகளை முன்வைத்து வந்தார். இப்போது அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் உள்ளதால் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

“மலையக 200  -  திகாம்பரம்  20” பாராளுமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று 02.11.2024 அட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மன்டாதில் இடம்பெற்ற போது ஏற்புரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் எம். உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்,

எனது அரசியல் வாழ்க்கைக்கு 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த நூல் வெளியிடப்படுகிறது. வெறுமனே விழாமபரதுக்காக என்று இல்லாமல் எனது உண்மையான சேவை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதே நோக்கமாகும்.

6 வருடங்கள் மாகாண சபையிலும் 14 வருடங்கள் பாராளுமன்றத்திலும் இருந்துள்ளேன். பிரதியமைச்சராக, கெபினட் அமைச்சராக இருந்ததோடு, நல்லாட்சி அரசாங்கத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சராக பதவியேற்று தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீட்டுத் திட்டத்தையும் இந்திய வீடமைப்புத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்திக் காட்டினேன்.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள், செயலங்களை அதிகரித்ததோடு, மலையகத்துக்கென தனியான அதிகார சபையையும் உருவாக்கினேன். 

பிரதேச சபையின் ஊடாக தோட்டங்களுக்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்று இருந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்ததால் அதன் சேவையை தோட்ட மக்களும் பெற்றுக் கொள்ள முடிந்தது.

நான் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து தோட்டத்தில் வாழ்ந்து அந்த மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து வைத்திருந்ததால் மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு, அரசியலில் பிரவேசித்த போது, பல்வேறு எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்திக்க நேர்ந்தது. 

எனினும், தோட்ட மக்களோடு வாழ்ந்த அனுபவம் இருந்த காரணத்தால் எனது அரசியல் பயணத்தை இலகுவாக மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து பல விடயங்கள் சொல்லப்பட்டு வந்துள்ளன. ஆனால், எமது காலத்தில் செய்து காட்டியுள்ளோம். உதாரணத்துக்கு அட்டன் புகையிரத நிலையத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த தகர வேலியை அகற்றி நவீன மயமாக்கி பிரதான பாதையை விஸ்தரித்து நகருக்கு புதுப் பொலிவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

எனது அரசியல் பயணத்தில் மனோ, இராதா, உதயா ஆகியோர் உறுதுணையாக இருந்ததோடு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றத்தில் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு விருப்பு வாக்கை அளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியவற்றை ஜனாதிபதி அனுர நிறைவேற்ற வேண்டும் - பழனி திகாம்பரம்  அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீது மிகவும் அன்போடும் அக்கறையோடும் கருத்துகளை முன்வைத்து வந்தார். இப்போது அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் உள்ளதால் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.“மலையக 200  -  திகாம்பரம்  20” பாராளுமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று 02.11.2024 அட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மன்டாதில் இடம்பெற்ற போது ஏற்புரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் எம். உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்,எனது அரசியல் வாழ்க்கைக்கு 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த நூல் வெளியிடப்படுகிறது. வெறுமனே விழாமபரதுக்காக என்று இல்லாமல் எனது உண்மையான சேவை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதே நோக்கமாகும்.6 வருடங்கள் மாகாண சபையிலும் 14 வருடங்கள் பாராளுமன்றத்திலும் இருந்துள்ளேன். பிரதியமைச்சராக, கெபினட் அமைச்சராக இருந்ததோடு, நல்லாட்சி அரசாங்கத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சராக பதவியேற்று தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீட்டுத் திட்டத்தையும் இந்திய வீடமைப்புத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்திக் காட்டினேன்.நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள், செயலங்களை அதிகரித்ததோடு, மலையகத்துக்கென தனியான அதிகார சபையையும் உருவாக்கினேன். பிரதேச சபையின் ஊடாக தோட்டங்களுக்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்று இருந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்ததால் அதன் சேவையை தோட்ட மக்களும் பெற்றுக் கொள்ள முடிந்தது.நான் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து தோட்டத்தில் வாழ்ந்து அந்த மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து வைத்திருந்ததால் மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு, அரசியலில் பிரவேசித்த போது, பல்வேறு எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்திக்க நேர்ந்தது. எனினும், தோட்ட மக்களோடு வாழ்ந்த அனுபவம் இருந்த காரணத்தால் எனது அரசியல் பயணத்தை இலகுவாக மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து பல விடயங்கள் சொல்லப்பட்டு வந்துள்ளன. ஆனால், எமது காலத்தில் செய்து காட்டியுள்ளோம். உதாரணத்துக்கு அட்டன் புகையிரத நிலையத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த தகர வேலியை அகற்றி நவீன மயமாக்கி பிரதான பாதையை விஸ்தரித்து நகருக்கு புதுப் பொலிவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.எனது அரசியல் பயணத்தில் மனோ, இராதா, உதயா ஆகியோர் உறுதுணையாக இருந்ததோடு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றத்தில் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு விருப்பு வாக்கை அளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement