• Nov 28 2024

நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள ஜனாதிபதி ரணில்..!

Chithra / Jun 18th 2024, 8:23 am
image

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

அதன்படி கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணைக்கான அங்கீகாரம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட உள்ளார்.

இதேவேளை ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாரம் காலை 09.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுலா சட்டத்தின் கீழும், அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழும், விளையாட்டு ஊக்கமருந்து தடைச் சட்டத்தின் கீழும் பல விதிமுறைகள் விவாதிக்கப்பட உள்ளன.

அத்துடன் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிபாரிசு செய்திருந்தமையினால் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

எவ்வாறாயினும், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள ஜனாதிபதி ரணில்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.அதன்படி கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணைக்கான அங்கீகாரம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட உள்ளார்.இதேவேளை ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் இந்த வாரம் காலை 09.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுலா சட்டத்தின் கீழும், அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழும், விளையாட்டு ஊக்கமருந்து தடைச் சட்டத்தின் கீழும் பல விதிமுறைகள் விவாதிக்கப்பட உள்ளன.அத்துடன் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிபாரிசு செய்திருந்தமையினால் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதுஎவ்வாறாயினும், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement