• Jun 18 2024

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஜனாதிபதி எடுத்த அதிரடி தீர்மானம்..! samugammedia

Chithra / Nov 19th 2023, 5:23 pm
image

Advertisement



இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையின் பேரில், ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பதற்காக பத்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட குழு மத்திய சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மத்திய வங்கி, திறைசேரி, இலங்கை சுங்க மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் காற்று மாசுபாட்டில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இந்தக் குழு விசேட கவனம் செலுத்தும்.  

இதற்கு முன்னர் நான்கு தடவைகள் இந்த நிபுணர் குழு ஜனாதிபதி செயலகத்தில் கூடி கலந்துரையாடியுள்ளதுடன், இந்த அறிக்கை அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. 

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஜனாதிபதி எடுத்த அதிரடி தீர்மானம். samugammedia இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையின் பேரில், ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பதற்காக பத்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த விசேட குழு மத்திய சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மத்திய வங்கி, திறைசேரி, இலங்கை சுங்க மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் காற்று மாசுபாட்டில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இந்தக் குழு விசேட கவனம் செலுத்தும்.  இதற்கு முன்னர் நான்கு தடவைகள் இந்த நிபுணர் குழு ஜனாதிபதி செயலகத்தில் கூடி கலந்துரையாடியுள்ளதுடன், இந்த அறிக்கை அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement