• May 18 2024

சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்பு - வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலா காரணம்? samugammedia

Tamil nila / Nov 19th 2023, 5:44 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளைஞனில் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

அலெக்ஸிடம் லான்ட் மாஸ்டர் வாகனம் உள்ளது. கடந்த 8ஆம் மரம் கடத்தல் சம்பந்தமான விசாரணை ஒன்று உள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்தனர். இதனால் அலெக்ஸ் பொலிஸ் நிலையம் செல்ல மறுக்க, அந்த இளைஞனுக்கு துணையாக அவரது நண்பனையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் நாங்கள் இரவு பொலிஸ் நிலையம் சென்றவேளை குறித்த இளைஞனின்  கதறல் சத்தம் பொலிஸ் நிலையத்தில் கேட்டது. இந்நிலையில் நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தோம்.

8ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளைஞனை 12ஆம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவர்மீது நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதன்போது குறித்த  இளைஞன் உடல்நிலை சீராக இல்லாமல் காணப்பட்டார். ஆகையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஓரளவு உடல்நிலை தேறியதால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மீண்டும் அவருக்கு உடல் சுகயீனனம் ஏற்பட்ட நிலையில் இன்றையதினம் அவரை சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்- என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட வண்ணம் உள்ளன.




சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்பு - வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலா காரணம் samugammedia வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து இளைஞனில் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,அலெக்ஸிடம் லான்ட் மாஸ்டர் வாகனம் உள்ளது. கடந்த 8ஆம் மரம் கடத்தல் சம்பந்தமான விசாரணை ஒன்று உள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்தனர். இதனால் அலெக்ஸ் பொலிஸ் நிலையம் செல்ல மறுக்க, அந்த இளைஞனுக்கு துணையாக அவரது நண்பனையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.இந்நிலையில் நாங்கள் இரவு பொலிஸ் நிலையம் சென்றவேளை குறித்த இளைஞனின்  கதறல் சத்தம் பொலிஸ் நிலையத்தில் கேட்டது. இந்நிலையில் நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தோம்.8ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளைஞனை 12ஆம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவர்மீது நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.இதன்போது குறித்த  இளைஞன் உடல்நிலை சீராக இல்லாமல் காணப்பட்டார். ஆகையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஓரளவு உடல்நிலை தேறியதால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.பின்னர் மீண்டும் அவருக்கு உடல் சுகயீனனம் ஏற்பட்ட நிலையில் இன்றையதினம் அவரை சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்- என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.வட்டுக்கோட்டை பொலிஸாரின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட வண்ணம் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement