வரலாற்றில் இதுவரை இந்த நாட்டிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கடன் இந்த ஆண்டு உலக வங்கியால் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உலக வங்கியுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அவர்கள் ஏற்கனவே கடனை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் நட்புறவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு இதனை தெரிவித்தார்.
அதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் 28 குப்பை சேகரிக்கும் வாகனங்களை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உலக வங்கியால் வழங்கப்படவுள்ள கடன்; ஜனாதிபதி விளக்கம். வரலாற்றில் இதுவரை இந்த நாட்டிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கடன் இந்த ஆண்டு உலக வங்கியால் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் உலக வங்கியுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அவர்கள் ஏற்கனவே கடனை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் நட்புறவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு இதனை தெரிவித்தார்.அதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் 28 குப்பை சேகரிக்கும் வாகனங்களை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.