• Nov 25 2024

தமிழ் கட்சிகள் - ஜனாதிபதி சந்திப்பு விரைவில் - வெளியான அறிவிப்பு..!

Chithra / Dec 19th 2023, 8:12 am
image

  தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது, எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அழைப்பு கடிதம் இன்றைய தினம் தமது கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இன்று மாலை பார்வையிட்டதன் பின்னர், ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக தமிழர் பேரவை உள்ளிட்ட தரப்பினர், இமாலய பிரகடனம் ஒன்றை தயாரித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தனர்.

குறித்த பிரகடனம் முன்வைக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுடன் இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பாக இது அமையவுள்ளது.


தமிழ் கட்சிகள் - ஜனாதிபதி சந்திப்பு விரைவில் - வெளியான அறிவிப்பு.   தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பானது, எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கான அழைப்பு கடிதம் இன்றைய தினம் தமது கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இன்று மாலை பார்வையிட்டதன் பின்னர், ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக தமிழர் பேரவை உள்ளிட்ட தரப்பினர், இமாலய பிரகடனம் ஒன்றை தயாரித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தனர்.குறித்த பிரகடனம் முன்வைக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுடன் இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பாக இது அமையவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement