• Jan 23 2025

பயங்கரவாத தடைச் சட்டம் அவதானத்துடன் பயன்படுத்தப்படும் - நாடாளுமன்றில் அறிவித்த அநுர அரசு

Chithra / Jan 21st 2025, 3:50 pm
image


 

பயங்கரவாதத் தடைச் சட்டம்  அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும்,

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் செய்தபோது, குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி அவரின் பயணத்தை தடை செய்ய முற்பட்டதாக ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும், அது நடைமுறையில் இல்லை என்றும் ஹக்கீம் வாதிட்டார்.

குறித்த விடயத்துக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 

இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபைத் தலைவர் குறிப்பிட்டார்.

சிறிதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவித்த அவர், 

பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இது பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.

எனவே, இது அரசாங்கத்தின் முடிவு அல்லது கொள்கையினால் ஏற்பட்ட சம்பவம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

பயங்கரவாத தடைச் சட்டம் அவதானத்துடன் பயன்படுத்தப்படும் - நாடாளுமன்றில் அறிவித்த அநுர அரசு  பயங்கரவாதத் தடைச் சட்டம்  அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும்,குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் செய்தபோது, குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி அவரின் பயணத்தை தடை செய்ய முற்பட்டதாக ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டினார்.அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும், அது நடைமுறையில் இல்லை என்றும் ஹக்கீம் வாதிட்டார்.குறித்த விடயத்துக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபைத் தலைவர் குறிப்பிட்டார்.சிறிதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.இது பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.எனவே, இது அரசாங்கத்தின் முடிவு அல்லது கொள்கையினால் ஏற்பட்ட சம்பவம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement