• May 21 2024

பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

Chithra / Apr 10th 2024, 2:25 pm
image

Advertisement

 

தமிழ், சிங்கள  புத்தாண்டு  காலத்தில் தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி, இறைச்சி மற்றும் பழங்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும், தட்டுப்பாடும் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கு முன்னர் ஒரு கிலோ கரட்டின் விலை 5,000 ரூபாவாக அதிகரிக்கும் என பலர் கூறிய போதிலும் தற்போது  கரட் மட்டுமன்றி அனைத்துப் பொருட்களினதும் விலை குறைவடைந்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி மே மாதத்திற்கு முன்னர் முட்டையினது விலை 30 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.   

பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.  தமிழ், சிங்கள  புத்தாண்டு  காலத்தில் தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி, இறைச்சி மற்றும் பழங்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்தோடு, கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும், தட்டுப்பாடும் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.புத்தாண்டுக்கு முன்னர் ஒரு கிலோ கரட்டின் விலை 5,000 ரூபாவாக அதிகரிக்கும் என பலர் கூறிய போதிலும் தற்போது  கரட் மட்டுமன்றி அனைத்துப் பொருட்களினதும் விலை குறைவடைந்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.அதுமட்டுமன்றி மே மாதத்திற்கு முன்னர் முட்டையினது விலை 30 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement