• Apr 30 2024

கடற்றொழில் அமைச்சருடன் வருகை தந்தவர்களே மதுபோதையில் நின்று பொன்னாவெளி போராட்டகாரர்களை தாக்கினர்...! ஸ்ரீபாஸ்கரன் குற்றச்சாட்டு...!

Sharmi / Apr 10th 2024, 2:35 pm
image

Advertisement

கடற்றொழில் அமைச்சருடன் வருகை தந்தவர்களே மதுபோதையில் நின்று பொன்னாவெளி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக அனைத்து மக்கள் ஒன்றிய வி.சிறிபாஸ்கரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில்  நேற்றையதினம்(09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி பொன்னாவெளி மக்கள் நீண்ட காலமாக சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில்  மக்களின் எதிர்ப்பையும் மீறி, கடற்தொழில் அமைச்சர் டோக்கியோ சீமெந்து நிறுவனத்திற்கு சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ள்ளார். 

எமது பிரதேசம் தாழ்நில பிரதேசம். கடலுக்கும் எமது நிலத்திற்கும் மூன்றடி இடைவெளியே உண்டு. அங்கு சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டால் கடல் நீர் உட்புகுந்து எமது கிராமமே கடலில் மூழ்கிவிடும். 

எமது போராட்டக்காரர்கள் மது போதையில் நின்றார்கள் என்றும், 150க்கும் குறைவானவர்களே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என அமைச்சர் தரப்பு கூறுவது முற்றிலும் பொய்.

இவர்கள் இரகசியமான முறையில் பொன்னாவெளிக்கு வருகை தந்ததால் எங்களால் உடனடியாக மக்களை திரட்ட முடியாத நிலையில் குறிப்பிட்டளவு மக்களுடன் போராட்டத்தில்  ஈடுபட்டோம்.

யார் மது போதையில் அங்கு வந்தார்கள் என அங்கிருந்தவர்களுக்கு தெரியும். அவர்களின் விபரங்களையும் வெளியிட தயாராக இருக்கிறோம். 

அமைச்சருடன் வந்தவர்களே மதுபோதையில் நின்று அகிம்சை வழியில் போராடிய மக்களை தாக்கினார்கள்.

பொன்னாவெளியில் மக்கள் இல்லை என கூறுகின்றார்கள். அந்த மக்களை அங்கிருந்து துரத்தியடித்ததே இவர்கள் தான். டோக்கியோ சீமெந்து தொழிற்சாலைக்கு நிலங்களை வழங்கிய போது , அவர்கள் அங்கு ஆழ் துளை கிணறுகளை அடித்த போதே அப்பகுதியில் நிலத்தடி நீர் உவரானது. அதனாலேயே மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என மேலும் தெரிவித்தார். 

பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு அங்குள்ள மக்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

உண்மையிலேயே, பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு திட்டத்தை மக்கள் விரும்பினால் அந்த சுண்ணக்கல் அகழ்வதற்கான செயற்பாட்டை இவர்கள் முன்னெடுக்க முடியும்.

மக்கள் சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தால்  எமது போராட்ட குழு எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காது எனவும் தெரிவித்தார்.


கடற்றொழில் அமைச்சருடன் வருகை தந்தவர்களே மதுபோதையில் நின்று பொன்னாவெளி போராட்டகாரர்களை தாக்கினர். ஸ்ரீபாஸ்கரன் குற்றச்சாட்டு. கடற்றொழில் அமைச்சருடன் வருகை தந்தவர்களே மதுபோதையில் நின்று பொன்னாவெளி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக அனைத்து மக்கள் ஒன்றிய வி.சிறிபாஸ்கரன் குற்றம் சுமத்தியுள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில்  நேற்றையதினம்(09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி பொன்னாவெளி மக்கள் நீண்ட காலமாக சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில்  மக்களின் எதிர்ப்பையும் மீறி, கடற்தொழில் அமைச்சர் டோக்கியோ சீமெந்து நிறுவனத்திற்கு சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ள்ளார். எமது பிரதேசம் தாழ்நில பிரதேசம். கடலுக்கும் எமது நிலத்திற்கும் மூன்றடி இடைவெளியே உண்டு. அங்கு சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டால் கடல் நீர் உட்புகுந்து எமது கிராமமே கடலில் மூழ்கிவிடும். எமது போராட்டக்காரர்கள் மது போதையில் நின்றார்கள் என்றும், 150க்கும் குறைவானவர்களே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என அமைச்சர் தரப்பு கூறுவது முற்றிலும் பொய்.இவர்கள் இரகசியமான முறையில் பொன்னாவெளிக்கு வருகை தந்ததால் எங்களால் உடனடியாக மக்களை திரட்ட முடியாத நிலையில் குறிப்பிட்டளவு மக்களுடன் போராட்டத்தில்  ஈடுபட்டோம்.யார் மது போதையில் அங்கு வந்தார்கள் என அங்கிருந்தவர்களுக்கு தெரியும். அவர்களின் விபரங்களையும் வெளியிட தயாராக இருக்கிறோம். அமைச்சருடன் வந்தவர்களே மதுபோதையில் நின்று அகிம்சை வழியில் போராடிய மக்களை தாக்கினார்கள்.பொன்னாவெளியில் மக்கள் இல்லை என கூறுகின்றார்கள். அந்த மக்களை அங்கிருந்து துரத்தியடித்ததே இவர்கள் தான். டோக்கியோ சீமெந்து தொழிற்சாலைக்கு நிலங்களை வழங்கிய போது , அவர்கள் அங்கு ஆழ் துளை கிணறுகளை அடித்த போதே அப்பகுதியில் நிலத்தடி நீர் உவரானது. அதனாலேயே மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என மேலும் தெரிவித்தார். பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு அங்குள்ள மக்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.உண்மையிலேயே, பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு திட்டத்தை மக்கள் விரும்பினால் அந்த சுண்ணக்கல் அகழ்வதற்கான செயற்பாட்டை இவர்கள் முன்னெடுக்க முடியும்.மக்கள் சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தால்  எமது போராட்ட குழு எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement