வவுனியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பல பொதுக் கூட்டங்களில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் கீழ் வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அந்தவகையில், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்.
இப் பொதுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை வேட்பாளர்கள், பொது மக்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவிற்கு பிரதமர் ஹிரிணி விஜயம் - பல கூட்டத்தில் பங்கேற்பு வவுனியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பல பொதுக் கூட்டங்களில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் கீழ் வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.அந்தவகையில், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்.இப் பொதுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை வேட்பாளர்கள், பொது மக்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.