• May 19 2024

மேல் மாகாண அபிவிருத்திக்கு முன்னுரிமை: ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை ! samugammedia

Tamil nila / May 16th 2023, 6:25 am
image

Advertisement

மேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணத்தில் முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக விரிவான அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா நகர அபிவிருத்தி, பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத நிலைமையாக மாறும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தித் திட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேல் மாகாணத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதான அபிவிருத்தித் திட்டமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான காணி விடுவிப்பு மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேல் மாகாண அபிவிருத்திக்கு முன்னுரிமை: ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை samugammedia மேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணத்தில் முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக விரிவான அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா நகர அபிவிருத்தி, பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத நிலைமையாக மாறும் எனவும் சுட்டிக்காட்டினார்.மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தித் திட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேல் மாகாணத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதான அபிவிருத்தித் திட்டமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான காணி விடுவிப்பு மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement