• Nov 26 2024

யாழில் பிரபல ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு...! வெடித்தது போராட்டம்...!

Sharmi / Feb 19th 2024, 10:37 am
image

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(19)  காலை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது, கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட்டது.

208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


யாழில் பிரபல ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு. வெடித்தது போராட்டம். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(19)  காலை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டமானது, கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட்டது.208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement