காஷ்மீர் சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்க கூடாது என தெரிவித்து கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிராக, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
சமீபத்தில் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் சார்புடைய அமைப்புகள் தொடர்புடையதாக கூறப்பட்டு வரும் நிலையில்,
இலங்கையிலும் அதன் எதிரொலிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் எமது தலைமுறை கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அமைப்பின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தலைமையில், அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு, கையெழுத்துப் பலகைகளுடன் நின்று, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கும் ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் தூதரகம், எந்தவிதமான பயங்கரவாத செயல்களையும் ஆதரிக்கக் கூடாது.
பாகிஸ்தான் தூதரகம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகம் இருந்தால், அதைப் பற்றிய விசாரணையை இலங்கை அரசு தொடங்க வேண்டும்.
இதுபோன்ற செயல்களை அரசாங்கம் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் தாங்களாகவே இனி நேரடியாக களத்தில் இறங்குவார்கள் என எச்சரிக்கை விடுத்தனர்
கொழும்பில் பாகிஸ்தான் தூதரகத்திற்குமுன் வெடித்த ஆர்ப்பாட்டம் காஷ்மீர் சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்க கூடாது என தெரிவித்து கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிராக, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.சமீபத்தில் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் சார்புடைய அமைப்புகள் தொடர்புடையதாக கூறப்பட்டு வரும் நிலையில், இலங்கையிலும் அதன் எதிரொலிகள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் எமது தலைமுறை கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.அமைப்பின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தலைமையில், அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு, கையெழுத்துப் பலகைகளுடன் நின்று, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கும் ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும்.இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் தூதரகம், எந்தவிதமான பயங்கரவாத செயல்களையும் ஆதரிக்கக் கூடாது.பாகிஸ்தான் தூதரகம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகம் இருந்தால், அதைப் பற்றிய விசாரணையை இலங்கை அரசு தொடங்க வேண்டும்.இதுபோன்ற செயல்களை அரசாங்கம் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் தாங்களாகவே இனி நேரடியாக களத்தில் இறங்குவார்கள் என எச்சரிக்கை விடுத்தனர்